கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் ஆலோசனைப்படி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், வேலு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடல்நலிவுற்று உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை எடுத்துக் கூறி, பாதிக்கப்பட்டோருக்கு அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்தனார்.







