ஆலம்பட்டி உச்சினி மாகாளியம்மன் கோவில் வைகாசி மாத கொடை விழா
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கான அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
அதிமுக மேற்கு ஒன்றியசெயலாளர் அழகர்சாமி,எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன், கலை இலக்கியபிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, ஆலம்பட்டி கிளை செயலாளர் முருகன் மற்றும் கோவில் விழா கமிட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.







