பொன்முடி வகித்த துறைகள் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு
சொத்து குவிப்பில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை கவர்னர் ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.







