அ.தி.மு.க. கொடி, பெயரை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதிமுக வில் இருந்து ஒ,.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒ/.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அதன்பிறகும் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு கட்சி கொடி, பெயரை பயன்படுத்தி வருகிறார். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று என்று எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி-ஒ பன்னீர்செல்வம் இருவரும் விளம்பரத்துக்காக மாறி மாறி வழக்கு போட்டு வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை அதிமுக கொடி மற்றும் பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தார்.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.







