கோவில்பட்டி அருகே கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் , வீட்டை பூட்டிவிட்டு எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றார்,. இரவில் அங்கு தங்கினார், பின்னர் , இன்று (ஜூலை 8) காலையில் சத்யா தனது வீட்டிற்குத் திரும்பினார்,. அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருநததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப்பாடப்பிரிவுகளின் குறைதீர்க்கும் மன்றம் மற்றும் வணிக பகுப்பாய்வு துறையோடு இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு நடத்தியது. கல்லூரி வணிக பகுப்பாய்வு துறைப் பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இயக்குநர் மபா. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார். கே. ஆர். கல்லூரியின் உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்புராயலு போதைப் பொருள் பற்றியும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். […]
சுப்ரிம் கோர்ட்டில் திமுக மனு தள்ளுபடி:முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டபடி கரூர் செல்கிறார்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட […]
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி பகுதியில் 22.6 செ.மீ., அளவுக்கு அதிகனமழை பெய்த நிலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுவரை மண்ணுக்குள் புதைந்த 6 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக கூறப்படும்நிலையில், மீட்புப்பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியிலிருந்து […]
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான முத்தமிழ் மன்றம் தொடக்க விழா தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உறுப்பினர் அருண் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ,விருதுநகர் மாவட்டம் என். சுப்பையாபுரம் […]
தூத்துக்குடி மாவட்டம், புதூர் அடுத்துள்ள காடல்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கலாவதி (வயது 62). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், கண்ணனும், கலாவதியும் மட்டும் வடமலாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர் நேற்று இரவு கலாவதி வீட்டின் உள்ளேயும், அவரது கணவர் கண்ணன் வீட்டின் வாசலிலும் படுத்து உறங்கினர். இன்று காலை 6 மணி […]
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாகக் கூறி, சக காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர்… ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஷீலா மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் . பணியாற்றினார். அப்போது, அவரது ஓட்டுநரான பிரபு […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கிடையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைபோல […]
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் மக்கள் நலத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்குத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, “லஞ்சம் […]
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: – “எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாகக் கூறினர். மேலும், திமுகவுக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர். திமுக முக்கிய நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் […]







