தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள 6 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து, ஏனைய 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் காலியானது. இந்த நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் […]
மதிமுக முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதாக கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்த மறுநாள் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் சேர்ந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் vivar வருமாறு:- ம.தி.மு.க.சிவகங்கை மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான புலவர் செ.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான திருப்பரங்குன்றம் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்டச் […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள். ஜூன் மாத கடைசி ஞாயிறு 28-06-26 அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முகாம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜெயராஜ் […]
கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று மாணவன் கோபாலகிருஷ்ணன் பள்ளியில் முதலிடமும் , கோவில்பட்டி கல்வி மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் முதலிடமும் , தூத்துக்குடி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு உறுப்பினா் சீத்தாராம் மகன் ஆவார். மாணவனின் இல்லத்திற்கு சங்க நிர்வாகிகள் நேரில் சென்று சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து […]
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 […]
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடந்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன .இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. […]
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு கண் மருத்துவமனை குழுவினர் இன்று சென்று […]
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்ததாவது:- 2026-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர்விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு […]
தெலுங்கானாவின் ஐதராபாத் ஷாமிர்பேட்டையில் தாசில்தாராகவும் இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகோமா சுசரிதா. இவர் கடந்த மாதம் 30 ஏக்கர் விளை நிலத்தை, விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, அதில் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இதை தொடர்ந்து சுசரிதா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையேகைதான சுசரிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன்படி, லஞ்ச ஒழிப்புப் […]
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது .கடந்த 2019-ம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது . சமீபத்திய சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சி […]







