தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்(தனி )தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று எம்எல்ஏ எம்எல்ஏவாக இருந்தவர் எம்.சி. சண்முகையா. நடைபெற இருக்கும் சட்டமன்றம் தொகுதியில் ஓட்ட ப்பிடாரம் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட விருப்பமனு அளித்து இருந்தார். ஆனால் இந்த முறை எம். சி. சண்முகையாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக திமுக சார்பில் போட்டியிட புதிய வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள ராமஜெயம் அறிவிக்கப்பட்டார். இதனால் எம். சி. சண்முகையா மற்றும் […]
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே, தேர்தலில் திமுக 164 தொகுதிகளிலும், அதிமுக 168 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மதுரவாயல் மாதவரம் ஆர்.கே.நகர் கொளத்தூர் வில்லிவாக்கம் திரு.வி.க.நகர் எழும்பூர் ராயபுரம் துறைமுகம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி […]
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்தேர்தல் காலத்தை முன்னிட்டு நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜி எஸ் மாதவனை பணியிட மாற்றம் செய்த நிலையில் புதிய எஸ்.பி.யாக மயில் வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், இதற்கு முன்பு 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர விமான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் தரை இறங்குவதற்கும் மற்றும் இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது இரவு நேர சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. […]
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதி திமுக வுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக கே. கருணாநிதி அறிவிக்கப்பட்டுள்ளார் கடந்த 2021 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட தனது கூட்டணிக் கட்சியான சிபிஐ(எம்)-மிடமிருந்து திமுக இத்தொகுதியை மீண்டும் திமுக பெற்றுள்ளளது. இதன் மூலம் திமுக அடிமட்ட தொண்டர்களின்விருப்பம் நிறைவேறியுள்ளது. வேட்பாளர் கே.கருணாநிதி அதிமுகவின் கோட்டைக்கு சவால் விடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உள்ளூர் கட்சித் தலைவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவின் முக்கிய உள்ளூர் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார்.நகராட்சிதலைவராக இருக்கும் கே.கருணாநிதி, கோவில்பட்டி […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று(மார்ச் 28) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு :- 1. விருத்தாசலம்-பிரேமலதா கழக பொதுச் செயலாளர் 2. தருமபுரி -டாக்டர் வி.இளங்கோவன் 3. சேலம் மேற்கு- அழகாபுரம்.ஆர். மோகன்ராஜ், 4.விருதுநகர் -வி.விஜய பிரபாகர், 5. ஓமலூர்- ஏ.ஆர்.இளங்கோவன், 6. மைலம்- எல்.வெங்கடேசன், 7. பல்லாவரம்- அனகை.டி.முருகேசன், 8. திருத்தணி- டி.கிருஷ்ணமூர்த்தி 9. குடியாத்தம் […]
சட்டப்பேரவை தேர்தலில்.திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக – 164 தொகுதிகள், காங்கிரஸ் – 28, தேமுதிக – 10, விசிக – 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5, இந்திய கம்யூனிஸ்ட் – 5, மதிமுக – 4 தொகுதிகள், இதர சிறிய கட்சிகள் என தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதேபோல, கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்குகிறது. எனவே, மொத்தம் 175 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் […]
முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட்டார். காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு :- 1. காங்கிரஸ் (28 தொகுதிகள்) 1. பொன்னேரி (தனி) 2. திருபெரும்புதூர் (தனி) 3. சோளிங்கர் | 4. உதகமண்டலம் 5. . ஈரோடு கிழக்கு 6. […]
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இக்கூட்டணியில் புதிய […]
சென்னை, சூளை, கோபால் தெரு அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததால் பணத்தையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து வேப்பேரி காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பணத்தை எடுத்து வந்தவர்கள் அஸ்வந்த் (34), குறும்பன் (31) என்பதும், இவர்கள் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் மேலாளர் […]







