ஜெகத்ரட்சகன் எம். பி. மதுபான ஆலையின் வாகனத்தில் இருந்த ரூ.50 லட்சம் பறிமுதல்
சென்னை, சூளை, கோபால் தெரு அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததால் பணத்தையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து வேப்பேரி காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பணத்தை எடுத்து வந்தவர்கள் அஸ்வந்த் (34), குறும்பன் (31) என்பதும், இவர்கள் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர் என்பதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனமும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் வாகனம் என்பதும் தெரியவந்தது

மேலும், கணக்கில் வராமல் கொண்டு சென்றது ரூபாய் 50 லட்சம் என்பதும், அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால், பறிமுதல் செய்த பணத்தை வேப்பேரி போலீசார் எழும்பூர் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







