• June 8, 2025

Month: September 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை

கோவில்பட்டி நகராட்சி 11வது வார்டு கடலைகாரத் தெருவில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்., மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி முன்னிலைவகித்தார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஒன்றிய […]

செய்திகள்

விண்வெளி மகிழ்ச்சியான இடம்- சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார்.  8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார்.இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-“இது என்னுடைய […]

செய்திகள்

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது

நெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் 2 பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர், அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை […]

சினிமா

சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

‘சுப்ரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. பின்னர் இவரது நடிப்பில் வெளியான ‘நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி’ போன்ற படங்களை நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த,  ‘நந்தன்’ திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை […]

சினிமா

‘தளபதி 69’ படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம்?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் ‘தி கோட்’. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69′ படத்தை அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, […]

சினிமா

எது நல்ல படம்? இயக்குனர் எச்.வினோத் கருத்து

இரா. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாக உள்ள புதிய படம் ‘நந்தன்’. சசிகுமார் இந்த படத்தில் கதாநாயகனாக,  இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ‘உடன்பிறப்பே’ என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. […]

செய்திகள்

ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு – திருமாவளவன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம்: துணை போலீஸ் சூப்பிரண்டிடம்

கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரின் மாத சம்பளத்தில் வருமானவரிக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை செலுத்தாமல் வங்கியில் வரவு வைத்ததாக போலியான ரசீது கொடுத்து ஏமாற்றியதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது பாதிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், நானும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், இதற்கு மோசடிக்கு  பள்ளி  உதவியாளர் தங்க மாரியப்பன் தான் காரணம் […]

செய்திகள்

எந்த காலத்திலும் தமிழக மக்கள் பாஜக வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்-டி.ஜெயக்குமார்

கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், கலந்துரையாடல் கூட்ட்டத்தில் பேசியதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ நேற்று வைரல் ஆனது. இது பற்றி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு! என்ற தலைப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் […]