2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை. மேலும், முதல் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே கவர்னர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து, இன்றைய 2ம் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டதை அடுத்து, அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இன்று […]
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், நாலாட்டின் புத்தூர் , எப்போது வென்றான், கழுகுமலை, கயத்தாறு உள்பட வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் உத்தரவின் பேரில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா ஆலோசனை படியும் நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய […]
கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 3-வது இடத்திற்கான போட்டியில் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், லட்சுமிமில் மேல்நிலைப் பள்ளி அணியும் […]
இந்த ஆண்டின் (2023) முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார். தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” […]
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:_ , இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக கவர்னரின் உரை வாசிக்கப்படும் போது, திமுகவின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்று சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடனும் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ் தேன்… மூதறிஞர் ஒழுக்க நெறிகள் […]
தமிழக சட்டசபையில் பரபரப்பு: திராவிட மாடல், அமைதிபூங்கா வார்த்தைகளை சொல்லாமல் தவிர்த்த கவர்னர்
தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். கவர்னர் உரையின் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற வாக்கியம் இடம்பெறிருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்துள்ளார். 2 மற்றும் 3 -ம் பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார். இதேபோல் 46ம் பக்கத்தில் இருந்த ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடியது கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கினார். அப்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். அவரை பேசவிடாமல் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பினர். இருப்பினும் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பின்னர் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு […]
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 26.8.2018 அன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 3 பெண்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து நழுவிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்தப் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கஞ்சாவை மறைத்துவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவர்களிடம் சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, […]
“சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான், எங்களை மீண்டும் காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள்”
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாளையங்கோட்டை ரோட்டில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர் திருநங்கைகள் மறியலை கைவிட்டனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.11.2022 அன்று பாளை மெயின் ரோடு பகுதியில் […]
கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ரொக்கம் 1000 ரூபாய், 1கிலோ, பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் கணேஷ் பாபு, பாண்டியம்மாள், நாராயண குரு, ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் மற்ற நியாய விளைக்கடைகளிலும் […]







