தென் தமிழகத்தில் அதிவேக ரெயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டில் மதுரை- தூத்துக்குடி இடையிலான 160 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி செலவில் புதிதாக இரட்டை ரெயில் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி- கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி- கடம்பூர் இடையேயான பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடந்துள்ளது தற்போது கோவில்பட்டி- கடம்பூர் […]
பிரான்சில் இருந்து 698 பயணிகளுடன் சொகுசு கப்பல் தூத்துக்குடிக்கு நேற்று வந்தது. ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ‘அமீரா’ என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம். 13 அடுக்குகளுடன் கூடிய 413 அறைகள் உள்ளன. 835 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கப்பலில் 3 ஓட்டல்கள், நூலகம், விளையாட்டு கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உள்ளிட்ட […]
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இரு படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன, வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் வாரிசு, துணிவு படம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு அண்ணாமலை சிரித்துகொண்டே விஜய், அஜீத் நடிப்பை பாராட்டி பதில் அளித்தார். அந்த கானொளியை பாருங்கள்…
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கேள்வி-நேரம் விவாதத்தின் பொது உணவு அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:- , நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் புதிய […]
கோவில்பட்டியில் வட மாநில மொத்த வியாபாரிகளால் வாழ்வாதாரம் இழந்த கைபேசி சில்லறை விற்பனையாளர்கள்
கோவில்பட்டியில் வட மாநில மொத்த வியாபாரிகள் மொத்த வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது சில்லறை வியாபாரத்தில் பொருட்களை வழங்கி வருகிறார்கள். இதனால் 150 க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கடந்த ஜனவரி 2 அன்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மொத்த வியாபாரிகள் இனி சில்லறை வியாபாரம் செய்ய மாட்டோம் என காவல்துறையினரிடம் எழுதிக் கொடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து சில்லறை வியாபாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டி கோவில்பட்டி […]
மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர் 23-ந் தேதி புறப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கலாசார சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடைசியாக இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.எஸ். அமேரா சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று காலை தூத்துக்குடி புதியதுறைமுகத்திற்கு வந்தது. இங்கிருந்து துறைமுக […]
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி, சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று கவர்னர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,” எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பட்டியல் வைத்துள்ளேன். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும்” என்று தெரிவித்தார். இதனைத் […]
கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் உரையாற்றும் போது சில பத்திகளை தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியின் கவர்னர் உரை தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரையில் என்னென்ன இருந்தது? அதில் எதையெல்லாம் கவர்னர் மாற்ற பரிந்துரை செய்தார்? அவை ஏற்கப்பட்டதா? போன்ற விவரங்களை கவர்னர் வெளியிட திட்டமிட்டுள்ளார். […]
கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்தன; பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த பணியை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இன்று(புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். தென் தமிழகத்தில் அதிவேக ரெயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து மதுரை-தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. […]
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் சர்க்கஸ் மைதானத்தில் நகர பா.ஜ.க. சார்பில் ‘மோடி நம்ம ஊரு’ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 100 பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பா.ஜனதா நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். * கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் முன்பு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் […]







