நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் […]







