பக்ரைன் நாட்டில் தமிழக பிரமுகருக்கு சிறந்த சமூக சேவகர் விருது

 பக்ரைன் நாட்டில் தமிழக பிரமுகருக்கு சிறந்த சமூக சேவகர் விருது

பக்ரைன் நாட்டில் கொரோனா பாதிப்பு காலத்தின் போதும், பின்னரும் சிறந்த சமூக சேவையாற்றி வரும், ” “லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்” சமூக உதவி இயக்கம் சிறப்பான சமூக சேவை ஆற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் அமைப்பாளராக தமிழகத்தின் குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த சையத் ஹனீப் இருக்கிறார்.
இவருக்கு “சிறந்த சமூக சேவகர்-2022” விருதை “படவ் குடும்ப சமூகம்” என்ற அமைப்பு, வழங்கியது.

1000 நாட்களுக்கும் மேலாக பக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு, இலவசமாக உலர் உணவுகள், சமைத்த உணவுப் பொருட்கள், பழங்கள், தண்ணீர், பழச்சாறு, பிஸ்கட், தொப்பிகள், முக கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள் மற்றும் பஸ் பயண அட்டைகள் ஆகியவற்றை,
“லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்” அமைப்பின் முயற்சியில் சையத் ஹனிப் வினியோகம் செய்தார்.

மார்ச் 2020 இல் தொடங்கப்பட்ட இந்த சேவையின் மூலம் இதுவரை 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பக்ரைனில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சையத் ஹனீப்பிற்கு “படவ் குடும்ப சமூகம்” நிர்வாகிகள், விருது வழங்கி கவுரவித்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *