கராத்தே, தொடர் சிலம்பம்:பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
![கராத்தே, தொடர் சிலம்பம்:பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து](https://tn96news.com/wp-content/uploads/2022/05/474f3de1-f267-49ed-b0e4-6110799a6248-1-850x455.jpg)
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.
இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி ஜப்பான் கராத்தே டூ கென்யோ ரியோ தமிழ்நாடு கராத்தே பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
அதேபோன்று கடந்த தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் வீர தமிழன் போர்க்கலை சிலம்பு கூடம் பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 50 மாணவ மாணவிகள் இன்று (25.5.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். \மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சாதனை நிகழ்த்திய மாணவ மாணவிகளை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி, பயிற்சியாளர்கள் வெள்ளைராஜா மற்றும் முத்து அருணா ஆகியோர் உடனிருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)