மக்கள் நலம் அறக்கட்டளை ஆண்டுவிழா
கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை 5-ம் ஆண்டு விழா மற்றும் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது, விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.மக்கள் நலம் அறக்க்கட்டளை தலைவர் என்,மாரிமுத்துகுமார் வரவேற்று பேசினார்.இந்திய கலாசார நட்புறவு கழக மாநில பொதுசெயலாளர் தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றி ஒருங்கிணைப்பாளர் கற்குவேல் ராஜன் விளக்கம் அளித்தார்.
நன்கொடையாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி விருதுகள் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சீனிவாசன், ரஜினி மக்கள் மன்றம் பாண்டிராஜ், ஜீவா அனுக்கிரகா அறக்கட்டளை ராஜேந்திரன் ஆகியோர் விழாவில் பேசினார்கள். முடிவில் அறக்கட்டளை செயலாளர் கணேஷ் நன்றி கூறினார்.







