• May 3, 2024

சாதம் வடித்த கஞ்சி- சத்துக்கள் ஏராளம் …

 சாதம் வடித்த கஞ்சி- சத்துக்கள் ஏராளம் …

சோறு வடித்த கஞ்சியை பருகும் வழக்கம் முன்பு நம்மிடையே இருந்தது. ஆனால், குக்கர் கலாசாரத்துக்கு மாறிய பின்னர் அதை மறந்தே போய்விட்டோம்.
வடிகஞ்சியில் நிறைந்துள்ள சத்துக்களை தெரிந்துகொண்டால் மீண்டும் அந்த பழக்கத்தை நாம் தொடர்வோம் என்பதற்காகவே இந்த தகவல்கள்…
சோறு வடித்த கஞ்சியை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகலாம். காய்ச்சல் நேரத்திலும் நோய்வாய்ப்பாட்டவர்களும்,உணவை உட்கொள்ள சிரமம் உள்ளவர்களும், முதியவர்களும் அருந்த வேண்டிய ஒன்றாகும்.


நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி.சி.இ. மேலும் நம்மை வெளியிலிருந்து காக்கக் கூடிய மூலக்கூறான Oryzanol இதில் காணப்படுகிறது.
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர் வடிகஞ்சியை உணவு வேளைக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு குடித்துவிட்டு உணவருந்தலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர் வெறும் வடிதண்ணீரை மட்டுமே அருந்தினால் பலன் கிடைக்கும்.
வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் சீரகப்பொடியை போட்டு குடிக்கலாம். இருமல் உள்ளவர்கள் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம். வடிகஞ்சியின் முழுபயன் கிடைக்க கைகுத்தல் அரிசி பயன்படுத்தினால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வடிகஞ்சி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு போடாமல் அருந்தலாம்.
குழந்தைகளுக்கு அரிசியை வறுத்து, அதை கொதிக்க வைத்து அதிலிருந்து தண்ணீரை வடித்து கொடுத்து வந்தால் எளிதில் ஜிரணமாவதுடன் குழந்தைகளும் ஊட்டமாக வளர்வார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *