• November 19, 2026

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நிலை: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

 கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நிலை: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை கொளத்​தூர் தொகுதி தவெக எம்​.எல்.ஏ. வி.எஸ்​.​பாபுவுக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்​பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள தனியார் மருத்துவமனை​யில் அனுமதிக்​கப்​பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனு​மதிக்கப்​பட்டு செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வி.எஸ்​​பாபு  உடல்​நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்​பூர்வமாக அறிக்​கைகளை வெளியிட்டு வந்தது. இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வெளி​யாகாததால், மீண்டும் வி.எஸ்.பாபுவின் உடல்​நிலை குறித்து பல்​வேறு தகவல்கள் சமூக வலை​தளங்களில் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அவரது தரப்பினர் கூறுகையில், வி.எஸ்​.பாபு நலமுடன் உள்ளார் என்றனர்.

இந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிப்படவில்லை. தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும். தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *