• November 19, 2026

உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

 உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Oplus_16908288

தமிழ்நாடு அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்..

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், நகரக் குழு உறுப்பினர்கள் முருகன், அந்தோணி செல்வம் ஆகியோர் பேசினார்கள். மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகரக் குழு உறுப்பினர்கள் தினேஷ் குமார், வேலுச்சாமி, கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முடக்கக் கூடாது.
-*மழைக்கால வெள்ளப்பெருக்கு மற்றும் அவசரத் தேவைகளுக்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
*ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதி ஆணைய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
*கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான நிதியைத் தாமதமின்றி உடனடியாக ஒதுக்க வேண்டும்.
*உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பறிக்கக் கூடாது.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும்  கோரிக்கைகள் அடங்கிய மனுவினை  நகராட்சி கணக்கீட்டு அலுவலரிடம் போராட்ட குழுவினர் வழங்கினர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *