கோவில்பட்டியில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்
Oplus_16908288
கோவில்பட்டியில் ஏஐடியுசி சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன்,
விஜயலட்சுமி, நகர நிர்வாகக்குழு உறுப்பனிர்கள் முனியசாமி, செல்லையா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் மெயின் ரோடு பகுதியில் ஏஐடியுசி சங்க கொடியை தலைவர் பெரியசாமி ஏற்றி வைத்தார்.பெயர் பலகையை மாவட்ட செயலாளர் பாபு திறந்து வைத்தார். திரளான ஏஐடியுசி சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.







