முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணத்திற்கு பெ. சண்முகம் கடும் எதிர்ப்பு
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசுவதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் இந்த கர்நாடக பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை அணுகுவது சரியான முடிவாக இருக்காது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது;-
தமிழக முதல் அமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகாவுக்கு சென்று காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது நான் என்ன கேட்க விரும்புகிறேன்.. கர்நாடகாவுக்கு சென்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? நீங்க அங்க போய் ஒண்ணும் நடக்கலைனா என்ன ஆகும் தெரியுமா? அங்கிருந்து தண்ணீரை நேராக தூக்கிட்டு வர போறீங்களா
3 ஆயிரத்து 500 டிஎம்சி தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நேரடியாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.போனால் தண்ணீரை வாங்கிட்டு வர முடியாது.
மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. காவிரிக்கு நடுவே அணைக்கட்ட கூடாது என்பது ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது .இதை நீங்கள் அங்கு சென்று நாங்கள் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல போறீங்களா?
இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இப்பொழுது எதற்கு கர்நாடகாவிற்கு செல்ல வேண்டும் ?.அந்தப் பயணத்தை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை நீங்கள் அங்கு சென்று காவிரியின் நதிநீர் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது அவர்கள் தண்ணீரை திறந்து விட முடியாது என்று கூறினால் தமிழ்நாட்டு டெல்டா விவசாயிகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முதலமைச்சர் விஜய் யோசிக்க வேண்டும் இது தேவையற்ற பயணம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற பிரச்சனை கிடையாது. டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிட்டது அங்கு தண்ணீர் கிடையாது”
இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.







