கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் கோரி முதலமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
Oplus_16908288

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திடக்கோரி மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில நிர்வாக குழு உறுப்பினர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி 18-7-2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்புவது, முதலமைச்சருக்கு இ-மெயில் அனுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
30-7-2026 அன்று மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், அன்றைய தினம் கடைகளிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது என்ற தீர்மானமும் நிறைவேறியது.
மேலும் 17-8-2026 அன்று மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கம் மற்றும் குடியிருப்போர் சங்கம் சார்பாக மங்கள விநாயகர் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் வியாபாரிகள் சங்கம் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் தெய்வேந்திரன், முத்துராஜன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் அபிராமி முருகன், வழக்கறிஞர்.ரவிக்குமார், நாஞ்சில் குமார், ராமலக்ஷ்மி ஐஎன்டியுசி நிர்வாகிகள் ராஜசேகர், துரைராஜ், ராஜாராம், ராஜா முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். மந்தித்தோப்பு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் போத்திராஜ் நன்றி கூறினார்.







