அனைத்து மாவட்டங்களிலும் ‘கோளரங்கம்’- அரசுக்கு கோரிக்கை
Oplus_16908288
தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி அன்ட் சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்து முருகன்,டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சாந்தி வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி& சயின்ஸ் சொசைட்டி (டாஸ்) மாநில பொதுச் செயலாளர் மனோகர் கலந்து கொண்டு மாவட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு
அனைத்து மாவட்டங்களிலும் கோளரங்கங்களை உருவாக்கிடவும், 1 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முழுமையான வானவியல் பாடத்திட்டத்தை வழங்கிடவும்,மாணவர்களின் கவனத்தை அறிவியல் மற்றும் கணிதத்தின் மீது ஈர்க்கும் வகையில் கோவையில் நடைபெறவுள்ள இளையோர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் கல்லூரி மாணவர்களை பங்கேற்க செய்திடவும் உள்ளிட்ட தீர்மானங்களை வாசித்தார்.

டாஸ் மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல்,மாநிலச் செயலாளர் சிந்தியா, நித்யா,உள்பட சென்னை,திருவள்ளூர்,விருதுநகர்,திருச்சி, மதுரை, கோவை, சேலம் தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் துணைத் தலைவர் கமலா ராணி நன்றி கூறினார்







