கோவில்பட்டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் டாக்டர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார். பல துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் வாணிபம், அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் கல்வி பயின்ற மொத்தம் 98 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 45 மாணவர்களும், 53 மாணவிகளும் அடங்குவர்.
மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. \
நிகழ்ச்சியின் போது கல்லூரியின் கல்வி முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.








