இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் கூப்பன்; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
Oplus_16908288
திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது :-
*.இல்லத்தரசிகள் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம்.
ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
*வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்த கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்

*உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும்வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
*புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2030 ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காங்கள் நகரங்களிலும், தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
*ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்படும், அதன்மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
*ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பிடிக்கும் வகையில் திராவிட மாடலின் செயல்பாடுகள் அமையும்.
*தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக, இரண்டு மடங்கு ஆக்கப்படும்.
*5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.
*ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
*சிறுபான்மையினர் தொழில் தொடங்க டேம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு அளவு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
*அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்கும் வசதியோடு தரம்வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.
*மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டுவசதி, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
*கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீர் செய்யப்படும்.
*அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கபடும்.
*திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளோடு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
*ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வித்தொகை உயர்த்தப்படும்.

*மொழிப்போராட்ட வரலாற்றை இளைஞர் தலைமுறையினர் அறிய நவீன நூலக வசதியோடு கூடிய காட்சிக்கூடம் பொள்ளாட்சியில் அமைக்கப்படும்.
*நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.
*தொழிற்சாலை அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்ல எளிதாக்கும் பொருட்டு, குழந்தைகள் காப்பகம் 1000 உருவாக்கப்படும்.
*பல்வேறு துறைகளில் சிறப்புற பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.
*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தொழில்தொடங்க டாப்செட்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
மேற்கண்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.







