ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அசைவ விருந்து
Oplus_16908288
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி. எச்.பாண்டியன் 81 வது பிறந்த தினத்தை முன்னிட்டு , இன்று 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம்கோவில்பட்டி ராஜீவ் நகர் 6 வது தெருவில் உள்ளநீடிய வாழ்வு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அறுசுவை அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

முதியோர் இல்லத்தில் உள்ள 75 பேர் மற்றும் அந்த முதியோர் இல்லத்தில் நடைபெறுகிற ஞாயிற்றுக்கிழமை ஜெபத்தில் கலந்து கொள்கிற 45 பேர் ஆக மொத்தம் 120 பேருக்கும்
நாகலாபுரம் CSI ஆதரவற்ற பெண்கள் பயிற்சி மையத்தில்
உள்ள 26 ஆதரவற்ற மாணவிகள், 10* பணியாளர்களுக்கும் இந்த விருந்து அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி முன்னாள் அரசு வழக்கறிஞர் வி.செல்வின் ராஜ்குமார் சார்பில் இனிப்புடன் அறுசுவை அசைவ விருந்து கொடுக்கப்பட்டது
சட்டக்கல்லூரி மாணவர் ஆனந்த சூர்யா , மென் பொறியாளர்கள்
டேரல் தியோப்ளஸ் , விக்டர் வீரபாண்டியன் , முன்னாள் பி. எஸ். என். எல் அதிகாரி பார்த்தீபன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்








