காங்கிரஸ் போட்டியிடும், 16 தொகுதிகள் முதற்கட்டமாக அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக, 16தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு :-

1)பொன்னேரி (தனி)
2)வேளச்சேரி
3)சோளிங்கர்
4ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5ஈரோடு கிழக்கு
6)உதகை
7) மயிலாடுதுறை
8)அறந்தாங்கி
9காரைக்குடி
10)சிவகாசி
11)திருவாடனை
12ஸ்ரீவைகுண்டம்
13நாங்குநேரி
14)குளச்சல்
15)கிள்ளியூர்
16)விளவங்கோடு

இது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெருந்தகை கூறுகையில் ‘” தென்காசி, விருத்தாச்சலம் தொகுதிகளை தவிர, தி.மு.க கூட்டணியில் கடந்த முறை வென்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் பற்றி மீண்டும் அமர்ந்து பேசி முடிவு காணப்படும்”
என்று தெரிவித்தார்.







