• March 19, 2026

ஸ்கூட்டரில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: திடீர் பரபரப்பு

 ஸ்கூட்டரில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: திடீர் பரபரப்பு

Oplus_16908288

 கோவில்பட்டி செக்கடி தெருவில் ஒரு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் கடுமையான விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது.

 இன்று காலை இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் வெளியே கிளம்பும்போது ஸ்கூட்டருக்குள் பாம்பு நெளிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றிய தகவல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு அதிக அளவில் கூட்டம் கூடியது.

 இதற்கிடையே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து ஸ்கூட்டருக்குள் இருந்த பாம்பை லாவகமாக உயிரோடு பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *