• March 19, 2026

கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தொழில்நுட்ப கருத்தரங்கம் 

 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தொழில்நுட்ப கருத்தரங்கம் 

Oplus_16908288

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு ( NEUROSPARAKZ 2026)  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

 கல்லூரி முதல்வர்  ரவீந்திரன் தலைமை தாங்கினார். மெக்கானிக்கல் துறை உதவிப் பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.டாக்டர். ராமையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி, குறியீடு சுற்று , தொழில்நுட்ப வினாடி வினா, போன்ற அறிவியல் சார்ந்த போட்டிகளும் எலக்ட்ரானிக்ஸ் ஸ்போர்ட்ஸ் (free fire), சதுரங்கம், புகைப்படம் எடுத்தல் போன்ற அறிவியல் சாராத போட்டிகளும் நடை பெற்றது.

கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி முதல் பரிசை தட்டிச் சென்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்  ரவீந்திரன்  பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.  

தொடக்கத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறை தலைவர் பாரதி வரவேற்று பேசினார்.உதவிப் பேராசிரியை வர்ஷா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *