• March 19, 2026

கோவில்பட்டி கல்லூரியில் மாணவர்களின் வியாபார சந்தை

 கோவில்பட்டி கல்லூரியில் மாணவர்களின் வியாபார சந்தை

Oplus_16908288

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிக நிர்வாகவியல் துறையானது நேற்று (புதன் கிழமை) வியாபாரச் சந்தையை நடத்தியது.

 இந்த வியாபாரச் சந்தையில் மாணவ, மாணவிகள் விதவிதமான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் போன்றவை அடங்கிய கடைகளை நடத்தினர். 

இந்த வியாபாரச் சந்தையை கல்லூரிச் செயலர், முதல்வர், இயக்குநர் மற்றும் துறைத்தலைவரின் முன்னிலையில் கோவில்பட்டி ஏசியா பார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பாபு  துவக்கி வைத்தார். 

இந்த வியாபாரச் சந்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *