சைபர் குற்ற வழக்குகளில் மோசடி: மீட்கப்பட்ட பணம், உரியவர்களிடம் மீட்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 20 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்தனர்.
மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி வழக்குகளில் மொத்தம் ரூபாய் 53,75,896/- திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது.
அதன்படி மீட்கப்பட்ட பணத்தை நேற்று (11.03.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், மேற்படி பாதிக்கப்பட்ட நபர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்.








