• March 12, 2026

கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா

 கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா

கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்வி நிறுவன்த்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டதுநிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.. முதல்வர் சாந்தி பிரியா பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளிடையே விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில், பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தாய்மார்களை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து, தலையில் கிரீடம் அணிவித்து  மரியாதை செய்யப்பட்டது. மேலும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, படிப்பு மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். முடிவில் ஆசிரியை நிஷா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *