திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்; ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டி
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. திமுக தலைவரும் முதலமைச்சரான மு க ஸ்டாலின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கூறி இருப்பதாவது

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இன்று (11-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டில் 4 (நான்கு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது







