வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
மாதிரிப்படம்
தூத்துக்குடி அருகே மடத்தூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்ற வழக்கில் சிப்காட் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடியை சேர்ந்தவர் பொவின்ராஜ் 35, மரிய அந்தோணி ஆக்னல் 36, பெண்கர் 38 மற்றும் இதழ்பட் 39 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3 ல் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி . விஜய் ராஜ்குமார் நேற்று (6.3.2026) மேற்படி 4 போரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுதீர் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர். வீமராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர். தனசேகரன்,, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன்,, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.







