தந்தை, மகனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தண்டனை பெற்ற ,முருகன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் வைத்து மளவரயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து (65/2014), அவரது மகன் பொன்இசக்கி (43/2014) . இவர்கள் இருவரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கால்வாய் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன்கள் முருகன் (45) மற்றும் சங்கரன்என்ற சங்கரபாண்டி (34/2019) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்த சமபவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது,

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் – II ல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சங்கரன் என்ற சங்கரபாண்டி கடந்த 2019ம் ஆண்டு இறந்து விட்டார்,.
தந்தை, ககன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி . பீரித்தா நேற்று (6.3.2026) முருகன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு கொலை குற்றத்திற்காக இரட்டை ஆயுள்தண்டனை, மற்றும் ரூ10 ஆயிரம் அபராதம், விதித்தார். மேலும் சாட்சிகளை மிரட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதமும் , கொலை மிரட்டல் குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ 2500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.,

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.







