கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி வைர விழா : ஓய்வு பெற்ற முதல்வர்களுக்கு பாராட்டு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி. வி. என்.) கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவை யொட்டி வைர விழா நிகழ்ச்சி நேற்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கல இசை, தேவார, திருவாசக பாடலுடன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர் ரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

கல்லூரிச்செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். இதனைத்தொடர்ந்து நினைவு மலர் மற்றும் செயலியை சிறப்பு விருந்தினர் காேயம்புத்தூர், கே. என்.சி. அறக்கட்டளை, முதன்மை கல்வி அதிகாரியும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினருமான கே.சத்தியநாராயணன் வெளியிட்டார். கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் அதனைப் பெற்றுக் காெண்டார்.
கல்லூரியில் பணியாற்றி ஒய்வுபபெற்ற முதல்வர்கள் டி. ஆர்.திருவேங்கடராஜ், கே. குமாரசாமி, கு.ஆதிலட்சுமி, ஏ.ராமச்சந்திரன் , எஸ்.கிருஷ்ணசாமி, துறைத்தலைவர்கள் ஆங்கிலத்துறை சார்ந்த கோ. கிருஷ்ணகுமார், தாவரவியல் துறை ஐ. எஸ்.கிருஷ்ணசாமி, வணிகவியல் துறை ஏ.லிங்கப்பன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் ரோஸ் மேட்சஸ் உரிமையாளர் ரா.கருப்பசாமி, துணைத்தலைவர் சார்ந்த வெ.இராமசுப்ரமணியம் , ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர்கள் ஆர்.ராமச்சந்திரன், த.பொன்னுலட்சுமி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.
கல்லூரி வைர விழா நினைவுச்சின்னம் பொறித்த தபால் தலை இந்திய அஞ்சல் நூலகத்தின் வாயிலாக வெளியிதப்பட்டது. பாடம், நூலகம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது.
கரகாட்டம், வில்லுப்பாட்டு, யோகா, பாடல் என்று மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. முடிவில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்(பொ) பா.மகேஸ்குமார்
நன்றி கூறினார்
விழாவிற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை இணைப்பேராசிரியர் ரா.வெங்கடோன் புள்ளியியல் துறைத்தலைவர் முனைவர்டி.சாரதாதேவி , துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.







