• March 9, 2026

கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தினவிழா

 கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தினவிழா

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக்  கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்,.எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைத்தலைவர் பார்வதி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் சுகந்தி மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி, தற்காப்புகலை மற்றும் தன்னம்பிக்கை பற்றி விளக்கி பேசினார். மேலும் கோலப்போட்டி, சிகையலங்காரம், மெகந்தி ஆகிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

விழாவை முன்னிட்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் நகராட்சி ஜூனியர் வரைவு அலுவலர் மேனகா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் பேராசிரியை சத்யா வரவேற்றார். முடிவில் கல்லூரி கணிதத்துறை உதவிப்பேராசிரியை ஹரிதா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *