திமுக அரசு மீதான 10 ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ; பாமக இளைஞரணி பொதுக்குழுவில் வலியுறுத்தல்
அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
*தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவது தான் தமிழ்நாட்டு மக்களின் முன் உள்ள மிகப்பெரிய கடமை ஆகும். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் உறுதியேற்றுக் கொள்கிறது.
* 108 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் மூலம் திமுக அரசை அகற்ற அடித்தளம் அமைத்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
* திமுக அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் கூட, அவற்றில் கீழ்க்கண்ட 10 ஊழல் குற்றச்சாட்டுகளை முதன்மையானதாகவும், திடமான ஆதாரங்கள் உள்ளவையாகவும் பாட்டாளி இளைஞர் சங்கம் கருதுகிறது. அவற்றின் விவரங்கள் வருமாறு:

1. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல்
2. ரூ. 4,730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி
3. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஒப்பந்த ஊழல்
4. ரூ.366 கோடி நகராட்சி நிர்வாகத்துறை பணியிட மாற்ற ஊழல்
5. ரூ.1,240 கோடி நெல் கொள்முதல் ஊழல் மற்றும் ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல்
6. ரூ. 2,000 கோடி கனிமவளக் கொள்ளை ஊழல்
7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி கட்டிட அனுமதி ஊழல்
8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல்

9. ஆண்டுக்கு ரூ.5,400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்
10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்
மேற்கண்ட அனைத்து ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. எனவே, ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்
*மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் அமைக்க திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்கள் முன்வர வேண்டும்!

.* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்!
*படித்த இளைஞர்களின் அரசு வேலை, தனியார் வேலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!
*தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த திமுக அரசுக்கு பாட்டாளி இளைஞர் சங்கப் பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
,மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







