கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு நிதி வசூல் இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாயொட்டி கோவில்பட்டியில் மக்கள் சந்திப்பு நிதி வசூல் இயக்கம் நடந்தது.
கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில செயலாளர் வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணா பேருந்து நிலைய பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, துண்டு பிரசுரங்களை மக்களிடம் நிதி வசூல் செய்தனர்.

நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கரும்பன், நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், தாலுகா செயலாளர் பாபு, நகரத் துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம்,லெனின்குமார், தாலுகா துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெகநாதன்,இன்னாசிமுத்து,
நகரக்குழு உறுப்பினர்கள் பரமராஜ், சரோஜா,ரஞ்சனிகண்ணம்மா,முனியசாமி, சண்முகவேல்,சிவா, சங்கர், அய்யாசாமி, சுப்பிரமணி,சீனிவாசன், கண்ணன்,லாயல் மில் ஏஐடியூசி முருகேசன், ஏஐடியூசி வள்ளி ராஜ், இளைஞர் பெருமன்றம் விநாயக மணிகண்டன், மாதர் சங்கம் பொன்மணி,மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







