மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டி – பாண்டவர்மங்கலம் நம்பிக்கையின் கூடாரம் ஜெப வீடு சபையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கிறிஸ்மஸ் நற்செய்தி விழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
சபையின் ஸ்தாபகர் – சமாதானம் அம்மா , சபையின் போதகர் . சாமுவேல் , கோவில்பட்டி முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் ,திருநெல்வேலி – யெகோவா நிசி அறக்கட்டளை ஸ்தாபகர் இம்மானுவேல் , மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் ,மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது. மேலும் கிறிஸ்மஸ் பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை அமலி ஜெனோக் , ஆக்னஸ் மற்றும் ஆசிரியர் அமல்ராஜ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்







