கோவில்பட்டி பள்ளியில் 327 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் அருணாசலம் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் .ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு, பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 327 மாணவ, மாணவிகளுக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிப் பேசினார்.

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மரிய ஜான் பிரிட்டோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், பள்ளி பொருளாளர் விஜயகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சாமிராஜன், வேல்முருகன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி உதவித் தலைமையாசிரியர் செல்வம் நன்றி கூறினார்.







