சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராம்லட்சுமி நகரின் தென்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக்காலத்தில் சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைகின்றனர். மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணை செயலாளர் பாபு தலைமை தாங்கினார்,, நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர துணை செயலாளர் அலாவுதீன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ரவிக்குமார், மாரியப்பன், மதி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பிரபு, மாதவன், ரகுமான்கான் உட்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் , சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடவு செய்து, ராம்லட்சுமி நகர் பகுதிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.







