கோவில்பட்டி முகாமில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 13 பேர் தேர்வு
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கமும் அரவிந்த் கண் மருத்துவமனனயும் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று நடத்தும் இலவச பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடந்த முகாமுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜி ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், மணிக்கொடி, பாலசுப்ரமணியன்,திருச்சிற்றம்பலம், பாலகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
முகாமில் 89 நோயாளிகள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

இவர்களில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அப்பனேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







