ஆக்கி வீரர்களுக்கு, மழைக்கால இயற்கை மருத்துவ முகாம்
Oplus_16908288
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து மழைக்கால இயற்கை மருத்துவ முகாமை கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாய நலக் கூடத்தில் நடத்தின.
ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா தலைமையில் நடைபெற்றது. இயற்கை மருத்துவர் திருமுருகன் மற்றும் வர்ம ஆசான் தனசேகரன் ஆகியோர் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் மருத்துவம் அளித்தனர்.

இம் முகாம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் யோகாசனம் பயிற்சி அளிக்கப்பட்டது. நிலவேம்பு கசாயம், முதியவர்களுக்கு கண் பரிசோதனை, மூட்டு வலிகளுக்கு தைலம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன
முகாமுக்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணை செயலாளர் வேல்முருகன், முகேஷ் குமார், ஜெகதீஸ்வரன், சார்லஸ் சண்முகப்பிரியா,அருண் ஆகியோர் செய்திருந்தனர்







