பாண்டியனார் மக்கள் இயக்கம் அரசியல் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பசுவந்தனை ரோட்டில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. மாநில பொறுப்பாளர் விக்னேஷ் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஜயகணேஷ் வரவேற்று பேசினார்.
பாண்டியனார் மக்கள் இயக்கம் நிறுவனத்தலைவர் சீனிராஜ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் ‘நாடார் அரசியல் அதிகார மீட்டெடுப்பு’ என்ற பிரசார பயணத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் உள்ள நாடார் சமுதாய மக்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிப்பது என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரச்செயலாளர் குரு, ஒன்றிய செயலாளர் விஜயராஜ், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் லிங்குமுத்து, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் வசந்த், மாவட்ட பிரதிநிதிகள் கணேஷ், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







