கோவில்பட்டி அரசு பள்ளி மாணவர்கள், ஜூடோ போட்டியில் சாதனை
தூத்துக்குடி மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டு போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் ஜோ, ஜோனதன், அருண், சக்தி அஜய் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கத்தை பெற்ற சாதனை படைத்தனர்

மேலும் தங்கம் வென்ற மாணவர் சுந்தரவேல் கவுதம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று கரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
.ஜூடோ போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்று வந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் ராஜாசுந்தர், ஜெய் சங்கர், கணேஷ், உடற் கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுடலை, மாரியப்பன், ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.







