தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் என்.ஐ.ஏ.அதிகாரி ஆகிறார்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை கண்காணிப்பாளராக (என்ஐஏ) நியமிக்கப்பட இருக்கிறார்,
இதனால் அவரை உடனடியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலாஜி சரவணனுக்கு பதிலாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். ஒரு வருடம் முடிந்து இருக்கும் நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்,







