தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார் இசக்கி முத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.. போலீசாரைக் கண்டதும் கடத்த முயன்ற நபர்கள் படகுடன் தப்பி ஓடி விட்டார்கள்.
கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.







