ஆயுளை அதிகரிக்கும் பூண்டு… எப்படி சாப்பிடவேண்டும்?

 ஆயுளை அதிகரிக்கும் பூண்டு… எப்படி சாப்பிடவேண்டும்?

Version 1.0.0

இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..)

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்…

“நிறை மாத கர்பிணி” போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும்… பச்சைபூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து_சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!… சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

:பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8 லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,

மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊறவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்கியத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்! 6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் அதிகரிக்கும்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *