வேளாண் பொறியியல் துறையின் செயல்பாடுகள்

தமிழக அரசு இந்த KAVIADP திட்டமானது 2021-22ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், 100% மாநில அரசின் பங்களிப்புடன் தரிசு நிலங்களாக மாற்றி அதன் மூலம் நிகர சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் அனைத்து துறை திட்டங்களை ஓருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலமாக கிராமங்களில் தன்னிறைவு வளர்ச்சி அடைய செய்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதில் மற்ற துறைகளுடன் வேளாண் பொறியியல் துறையும் ( AGRI ENGINEERING DEPARTMENT) இணைந்து செயல்படுகிறது.இத்திட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் செயல்பாடுகள் என்ன வென்பதை பார்ப்போம்.
செயல்படுத்தும் திட்டங்கள்.
1) பாசன வசதியில்லாத பதிவு செய்ய பட்ட தரிசு நிலதொகுப்பு களுக்கு நீர் ஆதாரங்களை ( ஆழ்துளை / குழாய் / திறந்த வெளி கிணறு கள்) உருவாக்குதல்
2) பாசன வசதியில்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நீர் ஆதாரங்களை உருவாக்குதல்.
3) தனிநபர் (விவசாயிகளுக்கு )
பண்னண குட்டை ( FARM POND ) அமைக்க உதவிடல்.
4) சிறுபாசன குளங்கள், ஊருணிகள் கண்மாய்கள் மற்றும் வரத்து கால் வாய்களை தூர்வாரி மேம்படுத்துதல்.
5) இந்த திட்டத்தில் உள்ள கிணறுகளுக்கு நீர் செறிவூட்டும் கட்டமைப்பு களை அமைத்தல் .
தகுதி வரம்பு என்ன தெரியுமா?
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி த்திட்டத்தின் ( KAVIADP ) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின்உட்பட்ட விவசாயிகள்.
செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஓவ்வொரு வருடமும் தெரிவு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகள்.
மொத்த கிராம பஞ்சாயத்துகள் 12525 களில் தமிழ்நாடு முழுவதும் ஓவ்வொரு வருடமும் தெரிவு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் மேலே கண்ட திட்டங்கள் வேளாண் பொறியியல் துறையின் சார்பாக அரசானணகளில், குறிப்பிட்ட வழிகாட்டு நெறி முறைகளின் படி , அனத்து இனங்களுக்கும் 100% மானியத்தில் செயல்படுத்த படுகிறது இந்தநிதியாண்டில் 1997கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டபட்டுள்ளது என்பது கூடுதலானதகவலாகும்.
வேளாண் பொறியியல் துறையின் செயல்பட்டால் (KAVI ADP ) உண்டாகும் பயன்கள் :
1) கிணறுகளில் இருந்து கிடைக்க பெறும் நீரினை முறையாகவும் சிக்கனமாகபயன்படுத்தி கூடுதலான மகசூல் பெற வழிவகுக்கும்.
2) கிராமங்களில் தூர்வாரி பாசன நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதன் முலமாக நீர் கொள்ளளவு அதிகரிக்க வழிவகை செய்ய படுகிறது.
3) பண்ணைக்குட்டைகளை விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் கூடுதலாக மீன்வளர்ப்பு செய்வதால் கூடுதலான வருவாய் கிடைக்க வழிவகை செய்ய படுகிறது.
4) தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதால் அதிக உற்பத்தி செய்ய வழிவகுக்கபடும்.மேலும் தங்களுடைய தேவைகளுக்கு வட்டார வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை நாடவும்.
அக்ரி சு.சந்திர சேகரன்,வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
