கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5-ம் தேதிக்குள் மாதசம்பளம் வழங்க கோரி முற்றுகை
கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. மக்கள் உரிமை இயக்கம் தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் சிறப்புரையாற்றினார்.
கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பி..எப். பணம், அரியர் மற்றும் சரண்டர் போன்றவைகளை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான செட்டில்மென்ட் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சாரல் குமாரிடம் போராட்ட குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
முற்றுகைப் போராட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







